வங்காலை மன்.புனித ஆனாள் கல்லூரியில் முத்தமிழ் விழா

வாஸ் கூஞ்ஞ  வங்காலை மன்.புனித ஆனாள் வித்தியாலயத்தில் நீண்ட காலத்திற்குப் பின் முத்தமிழ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மன்.புனித ஆனாள் வித்தியாலயதிற்கு அன்மையில் புதிய அதிபராக சி.எஸ்.சிவகுமார் நியமனம் பெற்றபின் இப்பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம்...

சுவிஸ் சூரிச்சில் மௌனித்தபொழுது ஒரு ஊடகவியலாளரின் பார்வையில்…

ஊடகவியலாளரின் பார்வையில்….. தாயகத்திற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளை மையமாகக் கொண்ட உண்மைச் சம்பவம் ஒன்றை கருப்பொருளாக வைத்து தாயகம் காரைநகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் சுதாகரன் அவர்கள் இயக்கிய "மௌனித்தபொழுது" முழுநீளத் திரைப்படம் கடந்த...

உயிருக்கு போராடிய சிறுத்தையொன்று பாதுகாப்பாக மீட்பு

அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையொன்று, நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது. சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை, மூன்று மணிநேர போராட்டத்துக்கு மத்தியில் மீட்டனர். சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இதனை சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். சுமார் 6 வயதுடைய ஆண் சிறுத்தை என நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். உரிய சிகிச்சைகளின் பின்னர் சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

தேசிய ரீதியில் சிறுகதை ஆக்கத்தில் காரைதீவு மஹோற்சபிக்கு வெள்ளிப் பதக்கம்

( வி.ரி.சகாதேவராஜா) அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் மொழி தினப்போட்டியில் பிரிவு.5 சிறுகதை ஆக்கத்தில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி ரா.மகோற்ஷபி இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தைப்...

காரைதீவு பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் பிமல்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் உள்ள 90 வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய பாலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள்...