மாவட்ட தகவல் அதிகாரிகளுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த இருநாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறை நிறைவு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மாவட்ட செயலகங்களில் பணியாற்றும் தகவல் அதிகாரிகளுக்கான இருநாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறை கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இரத்மலாணையில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகான் சபையின் தேசிய தொழில் பயிற்சி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இப் பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயிற்சிப் பட்டறையின் தொடக்க நாளன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹரிஷ பண்டார மற்றும் பிரதிப் பணிப்பாளர் எல்.பி. திலகரத்ன ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இப் பயிற்சி நெறியின் போது, நவீன தகவல் பரிமாற்றத்திற்கு அத்தியாவசியமான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பாக துறை சார்ந்த சிறந்த வளவாளர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பங்கேற்ற தகவல் அதிகாரிகளின் தொழில்சார் பணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் பல முக்கிய விடயங்கள், செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் இதன்போது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.