எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை மற்றும் தொழிற்கல்விச் சந்தை – 2026 நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (30) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்களம், PES நிலையம் மற்றும் Child fund மற்றும் Action Unity Lanka ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு அரச மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள், தொழில் வழிகாட்டல்கள், தொழிற்கல்வி மற்றும் திறன் பயிற்சிகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தமது நிறுவனங்களில் காணப்படும் வேலைவாய்ப்புகளுடன் பங்கேற்றதுடன் தகுதியான இளைஞர் யுவதிகளுக்கு நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
நேர்முகத் தேர்வில் தெரிவான சிலர் உடனடியாக தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டனர்.
தமது கல்வி மற்றும் தொழில்துறை தகைமைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளைத் தேடும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மனிதவள வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் மைக்கல் கொலின், Action Unity Lanka (AU Lanka) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே. கஜன், தொழில் வழிகாட்டல் இணைப்பாளர் அ. கரணாகரன், தொழில் இல்ல இணைப்பாளர் வ. ஆனந்தராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


