சூரிச்சில் இலங்கைத் தூதரகத்தின் நடமாடும் சேவை – 2026 மே 9-10

சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகம், அங்கு வாழும் இலங்கை மக்களின் நலன் கருதி, சுவிட்சர்லாந்தின் முக்கிய மாகாணங்களில் (Cantons) நடமாடும் தூதரக சேவைகளை (Consular Mobile Services) நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, சூரிச் (Zurich) நகரில்  மே மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விசேட நடமாடும் தூதரக சேவையொன்று நடைபெறவுள்ளது.

இச்சேவை தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:
• திகதி: 2026 மே 9 மற்றும் 10
• இடம்: Badenerstrasse 171, 8003 Zurich
• நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 15:00 மணி வரை
இந்த இரண்டு நாள் சேவையின் போது, சூரிச் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் இலங்கைச் சமூகத்தினருக்குத் தேவையான அத்தியாவசிய தூதரக சேவைகளை வழங்கத் தூதரகம் உத்தேசித்துள்ளது.
கால நேரம் குறைவாக இருப்பதால், இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும், 2026 மே 5 ஆம் திகதிக்கு முன்பாக முன்பதிவு (Appointment) செய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சூரிச் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் வசிக்கும் அனைத்து இலங்கை மக்களும், இந்த நடமாடும் சேவையைப் பயன்படுத்தித் தேவையான தூதரகப் பணிகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
வழங்கப்படும் சேவைகள்:
இந்த நடமாடும் சேவையின் ஊடாக பின்வரும் தூதரக வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்:
• கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுதல்.
• கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
• பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள்.
• இரட்டை குடியுரிமைக்கான (Dual Citizenship) விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்.
• e-BMD முறைமை ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
• திருமணமாகாதவர் என்பதற்கான சான்று மற்றும் சிவில் நிலை தொடர்பான உறுதிப்படுத்தல்கள்.
• ஓய்வூதியம் பெறுவோருக்கான வாழ்நாள் சான்றிதழ்களை (Life Certificates) உறுதிப்படுத்தல்.
• சத்தியக்கடதாசி (Affidavit) மற்றும் அதிகாரப் பத்திரம் (Power of Attorney) தொடர்பான சேவைகள்.
மேலதிக விபரங்களுக்கு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது +41 22 919 1250 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.