இறக்குவானையில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா

( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மண்ணில், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், டெல்வின் பி பிரிவு, ஆலய முன்றலில் நடைபெற்றது.

முன்னதாக மாபெரும் இந்து எழுச்சி ஊர்வலம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமதானந்த ஜீ மகராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமி பிரம்மானந்த ஜீ மகராஜின் விசேட ஆசீர்வாத உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டதோடு, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில் இரத்தினபுரி மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆயா பிரிவின் பொதுமக்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

“சுவாமிகளின் வருகை என்பது மண்ணிற்குப் பெருமையும், எமது மனத்திற்கு மகிழ்ச்சியும் அளித்தது” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விழா பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளை உயர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்நதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.