இ.சுதாகரன்
ஈழவிடுதலைப் போராட்டத்தில் உந்து சக்தியாக எழுச்சிப் பாடல்களை பாடியவர் தேனீசை செல்லப்பா.
பா.அரியநேத்திரன் மு பா.உ
எழுச்சிப்பாடல்கள் பல பாடி ஈழவிடுதலைப்போராட்ட அரசியலில் பலம் சேர்த்தவர் தேனீசை செல்லப்பா அவர்கள் மரணித்தாலும் அவருடைய குரல் உலகத்தமிழர்கள் மத்தியில் தொடர்ந்தும் ஒலிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கடந்த 2026, ஏப்ரல்,28, ல் இந்தியாவின் தமிழ்நாட்டில் இறைபதம் அடைந்த பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் நினைவு வணக்கம் கடந்த 2026, மே,02, ல் மட்டக்களப்பு இந்து இளைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது அதில் நினைவுரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்.
தமிழ் நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரான அவர், 1980களில் ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மூலம் ஈழத்தமிழர்களிடம் பரவலாக அறிமுகமானார்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடையும் வரை விடுதலைப் பாடல்களை பாடி வந்தார்.
தமிழகத்தின் திருநெல்லி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941 ஏப்ரல் 21 இல் பிறந்த இவர், 85 வது வயதில் இன்று (ஏப்ரல்,28) காலமானார்.
ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வுகளை தனது குரல் மூலம் திருநெல்வேலி மாவட்டம், சிங்கிலிப்பட்டி.
போராட்ட மேடையில் பாட்டுக்கச்சேரி ஒன்றை நடத்த சி.பா.ஆதித்தனார் விரும்பினார். அதற்குப் பாடகர்கள் யாரும் வராதநிலையில் தேனிசை செல்லப்பா மட்டும் சென்றதால் செல்லப்பா மேடையேற்றப்பட்டார்.
அந்த நேரத்தில் இலங்கையில் 1964 ஒக்டோபர் 30 இல் மலையக மக்களை வெளியேற்றும் ஶ்ரீமாவோ ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து ஐந்து இலட்சம் மலையகத்தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.
அதற்காக ஏ.எல்.நாராயணனை வைத்து ஒரு பாடலை எழுதி செல்லப்பாவைப் பாடவைத்தார் ஆதித்தனார்
“செந்தமிழா மனம் பொங்குதடா.. சிங்களர் கொடுமை மிஞ்சுதடா
இதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை சொந்த ஊரு மந்திரியும் கேட்கவில்லை.. யாரும் துணைக்கிங்கே வரவில்லை ஆறுதல் வார்த்தைகள் தரவில்லை
செந்தமிழா மனம் பொங்குதடா சிங்களர் கொடுமை மிஞ்சுதடா“ இதனை மேடைதோறும் உணர்ச்சி மேலிடப் பாடினார் செல்லப்பா.
இந்திய திரைப்பட பரட்சிப்பாடல்களே 1980, காலங்களில் ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வை தூண்டின குறிப்பாக1986, காலப்பகுதியில் வெளிவந்த ஊமை விழிகள் திரைப்படத்தில் இடம்பெற்ற மிகவும் புகழ்பெற்ற, ஊக்கமளிக்கும் புரட்சிகரமான பாடல் “தோல்வி இல்லை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா” என்ற பாடல் மக்கள் மனதில் இடம்பிடித்தன.
அந்த பாடல்களுக்கு பின்னர் கிராமிய மெட்டுகள் மூலம் தானே இசையமைத்து பல பாடல்களை கவிஞர் காசி ஆனந்தன் தொடக்கம் கவிஞர் புதுவை இரத்தினதுரை வரை நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி தமிழர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பிய ஒரு கலைஞன் தேனீசை செல்லப்பாவாகும்.
இவருக்கு பாசறை பாணர் என்ற புகழ் ஏன் வழங்கப்பட்டது என்ரால் “பாசறை” என்பதன் பொருள் பொராளிகளின் இருப்பிடம் “பாணர்” என்பது பாடகர் இசைகலைஞர்களை குறிக்கும் இவ்வாறான புகழ் பூத்த பாடகர் 1990, காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தொடக்கம் வடகிழக்கில் பல மாவட்டங்களிலும் வருகை தந்து பாடல் கச்சேரிகளை நடத்தினார்.
மட்டக்களப்பு வெபர் அரங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் இவர் பாடல்களை பாடி மட்டக்களப்பு தமிழ் மக்களின் வரவேற்பை பெற்றார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் வகிபாகம் தமிழ் மக்களால் ஒரு போதும் மறக்கவும் மறுக்கவும் முடியாதது.
ஈழத் தமிழர்களை நேசித்ததால் அவர் தனது நாட்டில் சட்டரீதியான நடவடிக்கை களுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று.
இருந்தும் எந்த இடராயினும் அதனைத் தன் உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்களுக் காகத் தாங்கிக் கொண்டார்.
சுருங்கக்கூறின் தமிழகத்து உடன்பிறப்புகளில் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு தேனிசை செல்லப்பா தனது இசையால் ஆற்றிய பெரும் பங்கை எங்கள் ஈழத் தமிழர் வரலாறு என்றும் நினைவுகூருவது காலத்தின்தேவை
தமிழ்தேசியம் பேசி அரசியல் செய்பவர்கள். தமிழ்தேசியவாதிகள் என தம்மை படம் காட்டுபவர்கள் பலர் தேனீசை செல்லப்பாவின் வரலாறு தெரியாது அப்படி தெரிந்திருந்தால் இந்த நிகழ்வில் இந்த மண்டபம் நிறைந்திருக்கும் உணர்வுகள் என்பது உள்ளத்தால் வரவேண்டுமே தவிர உதட்டால் வரக்கூடாது உள்ளத்தால் உணர்வுகளை பாடல்கள் மூலம் வெளிகலகாட்டிய ஒரு பெரும கலைஞனே தேனிசை செல்லப்பாவாகும் அவர் 85, முதுமை வயதில் எம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய இழப்பு தமிழ்மக்கள் மத்தியில் பாரிய இடைவெளியை வழங்கி உள்ளது என்பது உண்மை.
எமது தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள். இலக்கியவாதிகள் எதிர்காலத்தில் ஈழவிடுதலை போராட்ட வரலாறுகளை கலைகள் மூலம் வெளிக்கொணர முன்வரவேண்டும் எனவும் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஶ்ரீநாத், மட்டகளப்பு மேற்கு பிரதேச சபை தவிசாளர் கோபாலபிள்ளை, தாயகச்செயலணி மட்டக்களப்பு இணைப்பாளர் செல்வகுமார், இலங்கை தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ம மகளீர் அணி செயலாளர் ரஜனி, சமூக செயல்பாட்டாளர்களான அ. செல்வேந்திரன், மற்றும் சீலன், மூத்த போராளி ஜோண்பாதர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


