காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு தொடர்பான விபரம் வெளியானது!

காலி சிறைச்சாலை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாரலை இருந்த இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முயன்றபோது, ​​சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கைதிகளில் ஒருவர் சிகிச்சைக்காக காலி கரப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகளின் முயற்சியை முறியடிக்கும் நோக்கிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.