அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையொன்று, நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை, மூன்று மணிநேர போராட்டத்துக்கு மத்தியில் மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இதனை சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
சுமார் 6 வயதுடைய ஆண் சிறுத்தை என நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரிய சிகிச்சைகளின் பின்னர் சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
( வி.ரி.சகாதேவராஜா)
அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் மொழி தினப்போட்டியில் பிரிவு.5 சிறுகதை ஆக்கத்தில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி ரா.மகோற்ஷபி இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தைப்...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் உள்ள 90 வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய பாலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள்...
நூருல் ஹுதா உமர்
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர்...
ருத்திரன்.
வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா பாலர் பாடசாலை பெற்றோர் சங்க தலைவர் அ.மோகனராஜ் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள்,உடற்பயிற்சிக் கண்காட்சி,வினோத உடைப்...