எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஹாஜியானி சித்தி ஜெஸீனா நிஸ்றீன் எழுதிய “சங்கையின் ஒலி” (கவிதைத் தொகுப்பு) நூல் வெளியீட்டு விழா (25) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
முன்னாள் அதிபரும் முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான கலாபூஷணம்
ஏ.பீர்முகம்மது (இரண்டாம் விசுவாமித்திரன்) தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன்
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்
ஏ.எல். தௌபீக், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் றஷ்மி மூஸா ஆகியோர் கலந்து கொண்டதோடு, விசேட அதிதியாக சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரியும்
கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தருமான ஏ.பி.நௌஷாத் கலந்து சிறப்பித்தார்.
நூலாசிரியர் கவிதைத் தொகுப்பு நூலினை தனது அன்புத் தாயார் ஹாஜியானி ஜெமீலா கரீம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.
நிகழ்வில் நூலின் முதன்மைப் பிரதிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும் இளைஞர் அமைப்பாளருமான எம்.எம்.எம்.பாமி, ஓய்வுபெற்ற பொறியியலாளர் அல்ஹாஜ்.எம்.ஐ.எம். அப்துல் ஸலாம் ஆகியோர் பெற்றுக் கொண்டதோடு, நிகழ்வில் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் எம்.அப்துல் றஸாக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஸ்ரீ லங்கா பென் கிளப்பின் தலைவி கலாபூஷணம் சித்தி மஷுறா சுஹுர்தீன் ஆசிரியை இரசனைக் குறிப்பையும், அம்பாறை மாவட்ட கலாசார அதிகாரசபையின் பிரதித் தலைவரும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவருமான அஸ்வான் சக்காப் மௌலானா நிகழ்வில் வாழ்த்துரையும் வழங்கினர்.
நூலாசிரியரின் மூன்றாவது மகன் எம்.என்.எம். நாஜீல் மிகச் சிறப்பாகப் பாடி அதிதிகள் உட்பட சபையோரை மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தி, சபையோரின் பாராட்டையும் பெற்றார்.
கொட்டும் மழையிலும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள் என அரங்கு நிறைந்த பிரசன்னத்துடன் நூலாசிரியரின் கன்னி வெளியீடான இந்நூல் வெளியீட்டு நிகழ்வு மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பாசக்கவி பாயிஸ் கரீம் அழகிய கவிதை ஒன்றினை வழங்கியதோடு, நிகழ்வினை அறிவிப்பாளர் எம்.பி.எம். றின்ஸான் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.


