( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா – 2026 , நாளை(28) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என் . மணிவண்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்,
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர கலந்து கொள்ளவுள்ளார்.
விசேட அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. பிரபு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.ஜே. அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணத்தின் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
விழாவில் இம் முறை 51 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டுக்கான கலாசார விருதுகளைப்பெறுவோர் தொடர்பாக
கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திருமதி. மேனகா புவிக்குமார் அறிவித்துள்ளார் .
தமிழ் மொழி பிரிவின்கீழ் மொத்தம் 41 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சிங்கள மொழி பிரிவில் 10 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
11 சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, இளங்கலைஞர் விருதுக்கு 17 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் வித்தகர் விருதுக்கு 13 பேர் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


