மு.சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு தலவாக்கலையில் அஞ்சலி

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற் சங்கவாதியும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அமரர் சாகித்திய ரத்னா மு. சிவலிங்கத்தின் பூதவுடல், இன்று (25) தலவாக்கலை நகரசபை வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள், அரசியல் பிரதிநிதிகள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் என பலரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். நாளை மறுநாள் (27) ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ள நிலையில், அவரது பூதவுடல் இன்று (25) நுவரெலியாவிலிருந்து கொட்டகலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் அவரது பிறப்பிடமான தலவாக்கலை ( பெரிய மல்லியப்பு) மண்ணில் அமைந்த தலவாக்கலை லிந்துலை நகர சபை முன்றலில் சில மணித்தியாலங்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.