அரோகரா கோஷம் முழங்க பாண்டிருப்பில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற தீமிதிப்பு சடங்கு!

( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய நிகழ்வு நேற்று (25) வெள்ளிக்கிழமை மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க பக்திபூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் விசேட பூஜையுடன் பஞ்ச பாண்டவர்கள் ஐவர் சகிதம் சுமார் 100 தேவதாதிகள் மாலை 4.30 மணியளவில் கடற்கரை சென்று அங்கு மஞ்சள் குளித்தல் சடங்கு இடம்பெற்றது.

பின்னர் அங்கிருந்து வந்து மாலை 5.30 மணியளவில் அரோகரா கோஷம் முழங்க தீமிதிப்பு பிரதான சடங்கு இடம்பெற்றது.

இன்று சனிக்கிழமை 26ஆம் திகதி பாற்பள்ளயம் நிகழ்வு இடம்பெறுகிறது.