Chicago–Zürich SWISS விமானம் நடுவானில் அவசர எச்சரிக்கை – Azores தீவில் பாதுகாப்பாக தரையிறக்கம்

Chicagoவில் இருந்து Zürich நோக்கி வந்த SWISS விமானம், பயணிகள் அறையில் ஏற்பட்ட கடுமையான துர்நாற்றத்தைத் தொடர்ந்து Atlantic பெருங்கடலுக்கு மேலே அவசர எச்சரிக்கை விடுத்து, Portugal-ன் Azores தீவுகளில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

SWISS விமான நிறுவனத்தின் Operations Director Oliver Buchhofer தெரிவித்ததன்படி, Economy Class பகுதியில் திடீரென கடுமையான வாசனை உணரப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.

விமானத்திற்கு வான்வெளியில் முன்னுரிமை கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவசரநிலையும் அறிவிக்கப்பட்டது.

6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

தரையிறங்கிய பின்னர் ஐந்து பயணிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் குறுகிய நேரத்திற்கு கண் எரிச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை அனுபவித்திருந்தனர். எனினும் மேலதிக மருத்துவ சிகிச்சை எவருக்கும் தேவைப்படவில்லை.

துர்நாற்றத்திற்கான காரணம் உடனடியாகக் கண்டறியப்படவில்லை. சம்பந்தப்பட்ட விமானத்தில் முழுமையான தொழில்நுட்ப பரிசோதனை நடத்தப்படும் என SWISS தெரிவித்துள்ளது.

பயணிகளை Zürich அழைத்து வர மாற்று விமானம் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

⚠️ ஒரு மாதத்தில் மூன்றாவது SWISS சம்பவம்

Switzerland–USA வழித்தடத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் SWISS விமானம் அவசரமாக வழிமாற்றப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

ஜூலை 27 அன்று Zürich–New York விமானத்தில் இருக்கைகளுக்கு இடையில் விழுந்த Headphone Charging Case அதிக வெப்பமடைந்து புகை ஏற்பட்டதால் விமானம் அமெரிக்காவின் Bangor பகுதியில் தரையிறங்கியது.

ஆகஸ்ட் 9 அன்று Zürich–Boston விமானத்தில் ஒரு Power Bank புகை வெளியிட்டதால் விமானம் Dublinக்கு திருப்பப்பட்டது. இரு சம்பவங்களிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.