ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்தாய்வு செய்வதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களால் நேற்று (25)பின்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன
மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளுக்கு இடையே தெளிவின்மை காணப்படுகின்றன. இதனால் தேவையற்ற முரண்பாடுகள் தோன்றுகின்றன. எனவே எல்லைகளைத் தெளிவாக அடையாளப்படுத்த ஆவன செய்தல். (29.07.2025)
கனியமணல் (இல்மனைற்) ஏற்றிச் செல்லும் பார ஊர்திகளால் (டிப்பர்) கும்புறுப்பிட்டி தொடக்கம் புல்மோட்டை வரை உள்ள RDA வீதி பிற வாகனங்கள் பயணிக்க முடியாத வகையில் மோசமாக பழுதேடைந்து வருகின்றது. வீதி மேலும் பழுதையடாமல் தடுக்க ஆவன செய்தல்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் பாலம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனைப் புதிதாக கட்ட ஆவன செய்தல். (21.02.2025)
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கடலுக்கும் ஏரிக்கும் இடையில் வாழும் மக்களது உயிர்களை இடர் காலங்களில் பாதுகாப்பதற்காக புன்னையடிப் பாலத்தை அமைக்க ஆவன செய்தல். (21.02.2025)
திரியாய் மகா வித்தியாலயத்தில் இருந்து கண்ணாக் குளம் வரைச் செல்லும் ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர் நீளமான வீதி மிக மோசமாகப் பழுடைந்துள்ளது. இதைத் தாமதமின்றி முழுமையாக மறுசீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.
. 5.1 கிலோமீட்டர் நீளமான நீலப்பணிக்கன் குள வீதி மோசமாக பழுடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஏறத்தாழ ஆயிரம் விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இதனை முழுமையாக மறுசீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.
கிளிவெட்டிக் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டத்தின் பொறுப்பை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை விரைந்து முடிக்க ஆவன செய்தல். (30.10.2025)


