தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் இராஜமணி ஐயாவுக்கு இறுதி அஞ்சலி

திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மொரவாவே பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான இராஜமணி ஐயா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில், திருகோணமலை மாவட்டக் கிளையின் உப தலைவர் விஜயநாதம் விஜயகுமார் அவர்கள் நேரில் கலந்து கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் இறுதி அஞ்சலியையும் செலுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள், கட்சிப் பிரமுகர் குமார் ஜெயக்குமாரன், மாவட்ட மற்றும் பிரதேசக் கட்சி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த இராஜமணி ஐயாவிற்கு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொது சேவைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இராஜமணி ஐயாவின் சேவைகள் என்றும் மக்களின் நினைவில் நிலைத்திருக்கும். அவருடைய மறைவு திருகோணமலை மாவட்டத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.