நீர் வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

லபுகம மற்றும் களதுவாவ நீர்த்தேக்கங்களில் அடுத்த மூன்று மாத தேவைகளுக்கான போதிய நீர் இருப்பு உள்ளதால், தற்போது நீர்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சராசரியை விடக் குறைந்த அளவிலேயே மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை முன்னறிவிப்புகள் குறிப்பிடுகின்றன.

எனினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, தற்போதைய நீர் இருப்பு மட்டமானது தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பேணுவதற்குப் போதுமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், எதிர்கால வானிலை நிலவரங்கள் மற்றும் மழைவீழ்ச்சி அமைப்புகளுக்கு ஏற்ப இந்தநிலைமையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.