அதிக விலைக்கு கீரி சம்பா விற்பனை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய நடவடிக்கை!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கெஸ்பேவ, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், அரசாங்கத்தின் அதிகபட்ச விலையை மீறி அதிக விலைக்கு கீரி சம்பா விற்பனை செய்யப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் அதிரடிச் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (02) பிலியந்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இத்தகைய அநீதியான செயல்கள் இடம்பெற்றால், பொதுமக்கள் உடனடியாகத் தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 1977 (அலுவலக நேரங்களில் மட்டும்)