எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட வறட்சி முன்னாயத்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்றது.
காலநிலை மாற்றத்தினால் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் அதிக பாதிப்புக்களை ஏதிர்நோக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.
மாவட்டத்தில் தற்போதைய வறட்சியான நிலையினைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையன குடி நீர் பிரதேச சபை மூலமாக வழங்கப்பட்டு வருவதுடன் எனைய பிரதேசங்களுக்கு குடி நீர் வழங்குவதற்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
கடந்த வருடம் ஏழு பிரதேச செயலக பிரிவுகளில் 39 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 8597 மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தரவுகளின் அடிப்படையில் அனர்த்த பாதிப்பை குறைப்பதற்கு முன்கூட்டியே மக்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டது.


