எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் பதிவு செய்யப்பட்ட கிராமிய சகவாழ்வு சங்கங்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் மண்முனை பற்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன், சமூக சேவை உத்தியோகத்தர் இ.சிவலிங்கம், தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திருமதி நவமணி சிவலிங்கம் மற்றும் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


