எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை இன்று (28) திறத்து வைத்தார்.
பனை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் கைப்பணிப் பயிற்சி பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொது கட்டடத்தில் கைப்பணிப் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிலையத்தினால் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
இதேவேளை, பனை கைப்பணிக் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் வழங்கி வைத்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முறையில் பனை கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்து, அவர்களின் உற்பத்திகளுக்கான சிறந்த வருமானம் கிடைக்க வேண்டும் என்பதுடன், பனை உற்பத்திக் காட்சியறை மற்றும் கற்பகம் ஆகிய விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன்”போதையற்ற நாட்டை” உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் பனை மரங்களை மீள் நடுகை மேற்கொண்டு பனை சார் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து பனை உற்பத்தியாளர்களின் வாழ்வாதரம் மேம்பட வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கட்டது.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், பனை அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் எஸ்.ஜசிந்தன், மாவட்ட முகாமையாளர் ரீ. விஜயன், கைப்பணி ஆசிரியர் திருமதி ராஜேந்திரம் மலர்தேவி, கிராமசேவகர், ஸ்ரீபாலவிநாயகர் அறன் காவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


