நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் வட்டார எல்லைகளை நிர்ணயிப்பதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 3அ (1) ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, 2026 ஒக்டோபர் 30ஆம் திகதியிடப்பட்டு இந்த தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக எம்.கே.எஸ்.எச். ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், உறுப்பினர்களாக கே. தவலிங்கம், எம்.எம். மொஹமட், கே.எம்.எல். கருணாரத்ன மற்றும் ஒ.டி.எம்.ஐ. திலகரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் வட்டார எல்லைகளை மீளாய்வு செய்து, அவற்றை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகளை இந்த தேசிய குழு முன்னெடுக்கவுள்ளது.
இந்த நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரு உள்ளூராட்சி மன்றங்களினதும் எதிர்கால நிர்வாக மற்றும் தேர்தல் எல்லைகள் தொடர்பான நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.


