சுவிஸ் மலைகளில் புதிய பனிப்பொழிவு: வெண்மையாக மாறிய சிகரங்கள்!

சுவிட்சர்லாந்தில் குளிர் முனையுடன் வந்த மழையைத் தொடர்ந்து, அக்டோபர் 8ஆம் தேதி மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

பனிப்பொழிவு எல்லை சுமார் 1,800 மீற்றர் உயரம் வரை தாழ்ந்ததால், பல மலைச் சிகரங்கள் மெல்லிய வெண்பனியால் மூடப்பட்டன.

Zermatt பகுதியின் Monte Rosa மலைக்குடில், Arosa–Lenzerheide பகுதியின் Weisshorn, பேர்ன் ஓபர்லாந்தின் Eigergletscher மற்றும் Kleine Scheidegg, Säntis ஆகிய இடங்களின் இணையக் கமரா படங்களில் புதிய பனியைக் காண முடிகிறது.

வெள்ளிக்கிழமை வெளியான முன்னறிவிப்பின்படி, அடுத்த குளிர் முனை சுவிட்சர்லாந்தை அணுகுவதால் மீண்டும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை பனிப்பொழிவு எல்லை சுமார் 2,300 மீற்றரில் இருக்கும் என MeteoSchweiz கணித்துள்ளது.