பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் (IPU) 32ஆவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக் எம்.பி. அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்
மில்டன் டிக் அவர்கள் 2016ஆம் ஆண்டு முதல் குயின்ஸ்லாந்தின் ஒக்ஸ்லி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருவதுடன், 2022ஆம் ஆண்டு முதல் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராகவும் செயற்பட்டு வருகின்றார்.
பாராளுமன்ற இராஜதந்திரம், அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, உலக நாடுகளுக்கு இடையில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் கலந்துரையாடலை மேம்படுத்தும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்குப் பெரிதும் உதவும் என நம்புகிறேன் என்றும் ரிஷாத் பதியுத்தீன் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான தொடர்ச்சியான தொடர்பாடல்களையும், வலுவான ஒத்துழைப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது புதிய பொறுப்பில் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துவதுடன், அவரது தலைமைத்துவம் பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேலும் வலுப்படுத்தி, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகைக் கட்டியெழுப்பப் பங்களிக்கும் என நம்புகிறேன் என்றும் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.


