கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சிறப்பாக நடைபெற்ற சாதனை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா

( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட பீடாதிபதி தெரிவுப் பட்டியல்
சாதனை படைத்த 65 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (7) புதன்கிழமை நடைபெற்றது

பீடாதிபதி பட்டியல் ‘டீன்ஸ் லிஸ்ட்’ (Dean’s list) இல்
2018/2019 முதல் 2022/2023 கல்வியாண்டுகள் வரையில் சாதனை படைத்த மருத்துவம்(23) மற்றும் தாதிய மாணவர்கள்(45) மொத்தமாக 68 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மருத்துவ இளங்கலை (MBBS) கற்கைநெறி மற்றும் தாதிய இளங்கலை கற்கைநெறி (B.Sc nursing ) 2018/2019 முதல் 2022/2023 வரையான கல்வியாண்டுகளுக்கான ‘Dean’s List’ பட்டியலை கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட(மருத்துவ பீடம்) பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் வெளியிட்டிருந்தார்.

குறித்த பட்டியலில் பல்வேறு கல்வியாண்டுகள் மற்றும் வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்த 68 மாணவர்கள் சிறந்த கல்விச் செயல்திறனுக்காக இடம்பெற்றுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் தில்லை நாதன் சதானந்தன், சிரேஸ்ட உதவிப் பதிவாளர் எஸ்.சதீஸ் ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சௌக்கிய விஞ்ஞான பீட பேராசிரியர்கள் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சிரேஸ்ட உதவிப் பதிவாளர் எஸ்.சதீஸ் நன்றியுரையாற்றினார்.

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ‘Dean’s List’, மருத்துவத்துறையிலும் தாதியதுறையிலும் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விச் சாதனைக்கான முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.