( வி.ரி. சகாதேவராஜா,)
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கல்முனை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த ‘கிழக்கின் கலைச்சங்கமம் – Eastern Art Fusion’ கலை விழா நேற்று (6) செவ்வாய்க்கிழமை இரவு சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
முன்னொருபோதும் நடைபெறாத அளவில் ஐந்து நாட்கள் கொண்ட பல்வேறு கலை வடிவங்களை உள்ளடக்கியதான இந்த மாபெரும் கலைச்சங்கமம் எனும் பெருவிழா நடைபெறுகிறது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் வழிகாட்டலில் சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் தலைமையில் இப் பெருவிழா ஆரம்பமானது.
அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முதல் நாளான நேற்று தமிழ், முஸ்லிம் பாரம்பரியக் கலைக் கலாசார நிகழ்வுகள், பரதநாட்டியம், காவடி, கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், கரகாட்டம், பக்தர் கலை, சீனடி உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றன..
தொடர்ந்து ஐந்து நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


