மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பின்” உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வும், அதன் முதலாவது சிறப்பு முயற்சியும்

(ஏறாவூர் நிருபர்)

“மக்களுக்காக ஊடகம் – உண்மைக்காக சேவை” என்ற தொனிப்பொருளுடன் செயல்படும் “மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பின்” உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வும், அதன் முதலாவது சிறப்பு முயற்சியான “எமது முதுசங்கள் ” நிகழ்வும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பின் தலைவர் ஐ.எல். ஜமால்தீன் மற்றும் நிறுவநர், பணிப்பாளர் அப்துல் அஹத் அஹமட் அப்ரி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாரக் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சமூகத்தின் வரலாறு, பண்பாடு, சமூக சேவை மற்றும் மக்களின் நினைவுகளில் வாழும் முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை எதிர்கால தலைமுறைகளுக்காக ஆவணப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “எமது முதுசங்கள் ´ புதிய முயற்சியும் இந்நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் முதலாவது முயற்சியாக, மர்ஹூம் உமறுலெவ்வை போடியார் (உமறுப்போடியார்) அவர்களின் வாழ்க்கை, சமூகப் பங்களிப்பு மற்றும் வரலாற்றுப் பின்னணி காணொளி ஆவணமாகத் தயாரிக்கப்பட்டு இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மர்ஹூம் உமறுலெவ்வை போடியார் (உமறுப்போடியார்) மகன் மூத்த உலமாவுமான அஷ்ஷேய்க் யு.எல். அஹமதுலெவ்வை (பஹ்ஜி) மர்ஹூம் உமறுலெவ்வை போடியார் (உமறுப்போடியார்) மகள் ஜனாபா. ஹவ்வா உம்மா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எல்.நெய்னா முஹம்மது , பிரதி அதிபர் ஏ.அபுதாஹிர் ,ஏ.எஸ்.எம்.ஜெமீல் (ஏ.ஓ) உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், பல்வேறு பிரதேசங்களிலிருந்து வருகை தந்த மர்ஹூம் உமறுலெவ்வை போடியார் அவர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, மர்ஹூம் உமறுலெவ்வை போடியார் மகனான அஷ்ஷேய்க் யு.எல். அஹமதுலெவ்வை (பஹ்ஜி) க்கு மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேவேளை, மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பின் சமூகப் பணியைப் பாராட்டும் வகையில், மர்ஹூம் உமறுலெவ்வை போடியார் குடும்பத்தினரால் மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பிற்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், மர்ஹூம் உமறுலெவ்வை போடியார் மகள் ஹவ்வா உம்மா அவர்களுக்கும் குடும்பத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும், மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் மற்றும் இணையத்தளம் இந்நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.