மன்னார் மாவட்டத்தின் 2026 ஆண்டுக்கான காணிப்பயன்பாட்டு திட்டம் பூர்த்தி

( வாஸ் கூஞ்ஞ) 02.09.2026

மன்னார் மாவட்டத்தில் காணப்படும் காணிகளை பயன்பாட்டுக்கு உகந்ததாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு 2026 ஆம் ஆண்டுக்கான திட்டம் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கனகேஸ்வரன் தலைமையில் செவ்வாய்கிழமை (01.09) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற காணிப் பயன்பாட்டு கொள்கை தொடர்பானக் கூட்டமானது

காணிப் பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் மாவட்ட காணிப்பயன்பாட்டு அலுவலகத்தால் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம்தயாரித்தல் தொடர்பான இறுதி பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது உதவிப் பணிப்பாளர் (காணிப் பயன்பாடு) அவர்களினால் இத்திட்டம் தொடர்பான விரிவாக பவர்பாயிணட் விளக்கக்காட்சியுடன் முன்வைக்கப்பட்டு தெளிவுப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள்- குறைந்த பயன்பாடுடைய விவசாய நிலங்கள்- அரசுக்கு சொந்தமான பாவிக்கப்படாத நிலங்கள்- காணிப் பயன்பாட்டு பிரச்சினைகள் காணப்படும் இடங்கள்- மேய்ச்சல் தரைக்கு பொருத்தமான இடங்கள் மற்றும் மக்களின் பயன்பாட்டுக்கென சம்மந்தப்பட்ட திணைக்களங்களால் விடுவிக்கப்பட வேண்டிய இடங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்கள்- வனவள மற்றும் வனவிலங்கு பரிபாலன திணைக்களம்- நிலஅளவை திணைக்களம் இ புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்- நீர்பாசனத் திணைக்களம்- கமநல சேவைகள் திணைக்களங்களம் உள்ளிட்ட முக்கியமான பல திணைக்களங்களின் பங்குதாரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது