இலவசமாக வழங்கப்பட்டு வந்த UPI சேவைக்கு கட்டணம் அறவீடு!

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வந்த UPI சேவைக்கு, வணிகர்களிடமிருந்து கட்டணம் (Merchant Discount Rate – MDR) வசூலிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

இதன்படி சாதாரண நுகர்வோருக்கான பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.

எனினும், பெரிய வர்த்தக நிறுவனங்களில் நடைபெறும் 2,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 0.3 வீதம் முதல் 0.5 வீதம் வரை சிறிய அளவில் கட்டணம் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் இணையத் தாக்குதல்களில் இருந்து அமைப்பைப் பாதுகாப்பதற்கான செலவுகளை ஈடுசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கான செலவை யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.