கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வாரம்

( வி.ரி. சகாதேவராஜா)

நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி அலுவலகமும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமும் இணைந்து இந்த தேசிய நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தின.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் தேசிய நேர்மை வார நிகழ்வு நடைபெற்றது.

இதில் நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட கல்முனை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.