பாடசாலை விடுமுறை காலமாக இருப்பதால் சிறுவர்கள் மட்டில் கவனம் செலுத்தப்படுகிறது.

( வாஸ் கூஞ்ஞ) 09.08.2026

தற்பொழுது பாடசாலை விடுமுறை காலமாக இருப்பதால் சிறுவர்கள் தொழிலாளர்கள் அதிகம் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆகவே இவற்றில் கண்காணிப்பு அவசியம் என அரச அதிபர் மற்றும் குரு முதல்வர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது மன்னார் மடு அன்னை பெருவிழா 06 ந் திகதி தொடக்கம் 15ந் திகதி வரை நடைபெறுகின்றது. இந்நாட்களில் பாடசாலை விடுமுறைகளாகவும் காணப்படுகிறது.

ஆகவே இக்காலத்தில் அதிகமான சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகிறது. ஆகவே இவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உண்டு என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளாரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் தெரிவிக்கையில் ஆவணி மாதம் 06ந் திகதி தொடக்கம் திருவிழா முடிவுறும் வரை தாம் நடமாடும் சேவையை மேற்கொண்டு அவதானிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் மடு பிரதேச செயலகமும் இணைந்து செயல்படும்படி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.