தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09.08.2026) நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்ற நிலையில் புள்ளிப் பொத்தானை கோட்டத்தில் உள்ள மாணவர்களும் பரீட்சைக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் உள்ள பரீட்சை மண்டபத்துக்கு இம் மாணவர்களின் வருகையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்தனர்.
காலை முதலே மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததுடன், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் இப்புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.
பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், பரீட்சை சுமுகமாக நடைபெற்று வருகின்றது


