மன்னார் நகர் செயலக பண்பாட்டு விழா வெகு சிறப்புற நடைபெற்றது

( வாஸ் கூஞ்ஞ) 07.08.2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் நகரம் பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டு விழா வெள்ளிக்கிழமை (07.08) பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு மன்னார் நகர சபை மண்டபத்தில் இந்நிகழ்வுக்காக திறந்து வைக்கப்பட்ட தலைமன்னார் மேற்கு கலைஞர் அமரர் அந்தோனி அமலதாஸ் கூஞ்ஞ அரங்கில். சிறப்புற நடைபெற்றது

மன்னார் நகரம் பிரதேச செயலாளர் காந்திராசா காந்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும்

துறைசார் விருந்தினராக மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தனும் கலைசார் விருந்தினராக கலைக்குரிசில் எஸ் ஏ உதயனும் கலந்து கொண்டனர்

மன்னார் மாவட்ட செயலக முன்றலிலிருந்து மன்னார் நகர சபை மண்டபவத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் அமரர் அந்தோனி அமலதாஸ் கூஞ்ஞ அரங்கிற்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி விருந்தினர் வரவேற்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தலைமன்னார் மேற்கு கலைஞர் அமரர் அந்தோனி அமலதாஸ் கூஞ்ஞ அரங்கம் திறக்கப்பட்டு இந்த கலையரங்கில் கலை நிகழ்வுகள் கலைஞர் கெளரவிப்பு- கலை பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பனவும் இடம்பெற்றன

இந்நிகழ்வில் இசைக்கலைஞர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து- ஸ்ரீஷாகித்தியா நடனக் கல்லூரி மாணவிகளின் நடனம்- கலையருவி கலாமன்றத்தின் கிராமிய பாடல்- கீஞ்சா நிருத்தியோதயம் கலாமன்றத்தின் கீர்த்தனம்- மன்.சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மாணவிகளின் நாட்டிய நாடகம்- வீஎம்சீரி கலைமன்றத்தின் இசைக் கச்கேரி- லோறன்சியா கலா மன்றத்தின் கிராமிய நடனம் மற்றும் மாநகன் கலைகளின் ஊற்று கலா மன்றத்தின் நாட்டுக்கூத்து ஆகிய கலை நிகழ்வுகளும் தலைமன்னார் மேற்கு கலைஞர் அமரர் அந்தோனி அமலதாஸ் கூஞ்ஞ அரங்கில் நடைபெற்றது.

அத்துடன் இந்த விழாவில் பேசாலையைச் சேர்ந்த திருமதி அமல உற்பவி லீனஸ் அவர்களுக்கு சிறுகதைக்கும்
இசைக்கு பேசாலையை சேர்ந்த திருமதி ஸ்ரிபன் சிசில் பெனோ-
நாடகத்திற்கு தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த திரு எமிலியான் ஸ்ரிபன் சுகந்தரூபன் கூஞ்ஞ மற்றும் புதுக்கமத்தைச் சேர்ந்த திருமதி மேரி நிருபா பஸ்ரியனுக்கு ஓவியத்திற்கும் இந்த நான்கு கலைஞர்களும் ‘கலைச்செம்மல்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வுக்கான சகல ஒழுங்கமைப்புக்களையும் மன்னார் நகர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி கயல்விழி கனியூட் மேற்கொண்டதுடன் நிகழ்ச்சி நிரல்களை எஸ்.ஏ.ராதா பெனாண்டோ தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.