மன்னார் மாவட்ட செயலகத்தில் பொது மக்களின் நலன் கருதி புதிய கருமபீடம் திறந்து வைப்பு

( வாஸ் கூஞ்ஞ); 07.08.2026

மன்னார் மாவட்ட செயலகத்தpற்கு தங்கள் தேவைகளை நிறைவேற்ற வரும் மக்களுக்கான சேவைகளை மேலும் திறன்படவும் விரைவாகவும் வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட செயலகத்தின் நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட கருமபீடம் வெள்ளிக்கிழமை (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள்- மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தமிழ் பண்பாட்டுக்கு அமைவாக பால் பொங்கி புதிய கருமபீடத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வரும் பொதுமக்களின் தேவைகளுக்கு விரைவான மற்றும் இலகுவான சேவையை வழங்கும் வகையில் இந்த புதிய கருமபீடம் அமைக்கப்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.