புலமைப்பரிசில் செயலமர்வு

தலவாக்கலை நிருபர்

சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளையின் ஊடாக தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சைக்கான செயலமர்வு ஒன்று ஹட்டன் பன்மூர் தமிழ் வித்தியாலயத்தில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் தரம் 5 மாணவர்களுக்கு
நடாத்தப்பட்டது. அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் கமலானந்தனின் வழிகாட்டலிலும் அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான தோழர் நேசன் சங்கர் ராஜின் நிதிப் பங்களிப்பின் ஊடாகவும் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.