கட்டுக்காரன்குடியிருப்பு புதுமைவாய்ந்த புனித சந்திமையோர் ஆலய பெருவிழா

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மறைமாவட்டத்தில் தலைமன்னார் பங்குக்கு உட்பட்டு பின் கீழியன்குடியிருப்பு பங்கின்கீழ் இயங்கிவந்து தற்பொழுது ஒரு தனி பங்காக செயல்பட்டு வரும் மிகவும் பழமைவாய்ந்த ஒரு ஆலயமாகவும் மன்னார் மாவட்டத்தில் பல கிராம மக்களும் தரிசித்து வரும் புதுமைவாய்ந்த ஒரு ஆலயமாக திகழும் கட்டுக்காரன்குடியிருப்பு புனித சந்திமையோர் ஆலய பெருவிழா சனிக்கிழமை (25.07) பங்குத்தந்தை அருட்பணி எஸ்.டிசாந்தன் அடிகளார் தலைமையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட அன்பியம்- திருபாலத்துவ வபை மற்றும் இளைஞர்களுக்கு பொறுப்பாக இருக்கும் அருட்பணி நீக்கிலாஸ் அடிகளாரின் தலைமையில் கட்டுக்காரன்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி டிசாந்தன்- தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் பேசாலை உதவி பங்குத்தந்தை அருட்பணி யதுர்சன்ராஜ் அடிகளார் ஆகியோர் இணைந்து பெருவிழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

கிறிஸ்து இயேசுவால் மிகவும் இறுக்கமான அன்பை பெற்று அவருடன் பயணித்த புனித யாகப்பரின் வாழ்வைப்பற்றி பக்தர்கள் சிந்திக்கும் வகையில் கருத்துமிகு மறையுரையை ஆற்றிய அருட்பணி நீக்கிலாஸ் அடிகளார் திருப்பலியைத் தொடர்ந்து திருச்சுரூப பவியின் பின் இறைமக்களுக்கு புனிதரின் திருச்சுரூப ஆசீரையும் வழங்கினார்.