புனித யாகப்பர் இயேசுவில் கொண்டிருந்த உறுதியான உணர்வுபூர்வமான ஆழமான அன்பைபோல் நாமும் வாழ்வோம். அருட்பணி நீக்கிலாஸ் அடிகளார்

(வாஸ் கூஞ்ஞ)

புனித யாகப்பர் இயேசுவில் கொண்டிருந்த உறுதியான உணர்வுபூர்வமான ஆழமான அன்புடன் இருந்து கொண்டு கிறிஸ்துவால் மிகவும் நேசிக்கப்பட்ட இவரும் இவரின் சகோதாரரும் இறைவனின் வலது பறதத்pலும் இடது பறத்திலும் வீற்றிருக்க ஆசைபட்டதுபோல் நாமும் இவ்வாறு எண்ணத்துடனும் எமது குடும்ப உறவு வாழ்விலும் வாழ வரம் கேட்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட அன்பியம்- திருபாலத்துவ சபை மற்றும் இளைஞர்களுக்கு பொறுப்பாக இருக்கும் அருட்பணி நீக்கிலாஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

கட்டுக்காரன்குடியிருப்பு புனித சந்திமையோர் ஆலய பெருவிழா சனிக்கிழமை (25.07) பங்குத்தந்தை அருட்பணி எஸ்.டிசாந்தன் அடிகளார் தலைமையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டபோது இவ்விழாவில் கூட்டுத்திருப்பலிக்கு தலைமைதாங்கிய அருட்பணி நீக்கிலாஸ் அடிகளார் தொடர்ந்து தனது மறையுரையில்

திருச்சபையின் தலைசிறந்த கத்தோலிக்க மக்களால் மிகவும் அன்பு செய்யப்படுகின்ற புனிதரின் ஒரு அற்புதமான மன்னார் மறைமாவட்டதத்pன் மிகவும் பழைமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றுதான் இந்த கட்டுக்காரன்குடியிருப்பு புனித சந்திமையோர் ஆலயம்.

இந்த கிராமத்தின் பாதுகாவலரின் விழாவைத்தான் நாம் இன்று (25.07) கொண்டாடுகின்றோம். ஐரோப்பிய மக்கள் கொம்போஸ் என்கிற நகரத்திற்கு வருடந்தோறும் படையெடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. காரணம் இந்த புனிதரின் திருப்பண்டம் இங்குதான் வைக்கப்பட்டு ஒரு பேராலயம் எழுப்பப்பட்டு இருக்கின்றது. பலரும் இங்கு சென்று ஆசீர்பெற்று வருகின்றனர்.

இந்த புனிதர்தான் இறைமகன் கிறிஸ்துவால் முதல்முறை தனது அப்போஸ்தலராக அழைக்கப்பட்டவர். இவர் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் இருந்தபொழுதும் இறை இயேசுவின் அழைப்புக்கு செவிசாய்த்து உடன் இவரும் இவரின் சகோதரரும் இயேசுவை பின்தொடர்ந்தனர்.

இந்த புனிதர் மறைபரப்பில் ஈடுபட்டமையால் கழுத்து வெட்டப்பட்டு மறைசாட்சியாக மரணித்தவர். சகோதரனான யோவானும் யாகப்பரும் இடியின் மக்கள் என செல்லமாக அழைக்கப்பட்வர்கள்.

இவர்கள் இருவரும் இறை இயேசுவில் உயிர் துடிப்புள்ளவர்களாகவும் பாச நெருக்கத்தையும் கொண்டு இருந்தவர்கள். ஒரு இடத்தில் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத மக்களைக் கண்ட இவர்கள் இருவரும் இந்த மக்களை அழித்து விடுவமா? என இயேசுவைப் பார்த்துக் கேட்டபோது இயேசு இவர்கள் இருவரையும் கடிந்து கொண்டார். அவ்வளவுக்கு இந்த இருவரும் இயேசுவில் அன்பு கொண்டிருந்தனர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

தாங்கள் இருவரும் இயேசுவில் நெருக்கமான அன்பு கொண்டிருந்தமையால் இயேசுவின் வலது புறதத்pலும் இடது புறத்திலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தங்களுக்குள்ளேயே தோற்றுவித்திருந்தனர்.

இறை இயேசுவின் மக்களாக இருக்கும் நாமும் இறை இயேசுவில் நெருக்கமான இறுக்கமான அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று இன்று இந்த புனிதர் எம்மை கேட்டுக் கொள்ளுகின்றார்.

இயேசு தெரிந்து கொண்ட 12 அப்போஸ்தலர்களில் 3 பேரை மிகவும் நேசித்தார் அன்பு செய்தார்.; பேதுரும் யோவானும் மற்றும் யாக்கோப்பும் மிகவும் நேசிக்கப்பட்டமையால் இயேசு சென்ற இடமெல்லாம் இவர்களை தன்னுடன் அழைத்துச் செல்லப்பட்டதை நாம் வேதாகமத்தில் காண்கின்றோம்.

இது இயேசுவின் பாராபட்சமான அன்பு என நாம் பார்க்க முடியாது. இது இயேசுவில் கொண்டிருந்த ஆழமான வெளிப்படையான அன்பாகவே இது காணப்படுகிறது. இவர்கள் மூவரும் இயேசுவில் ஆழமான அன்பை கொண்டிருந்தமையாலேயே இயேசுவும் இவர்களில் இவ்வாறு நடந்து கொண்டார் என இறையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களில் நான்கு விதமான உறவுகள் காணப்படுகின்றது. ஒன்று அறிமுக உறவு- அடுத்து அறிவு சார்ந்த உறவு- மற்றது உள்ளார்ந்த உணர்வு நிலை உறவு அடுத்து தூய்மையான ஆழமான உறவு இவ்வாறான உறவுகளையே நாம் மனிதர்களில் காண்கின்றோம்.

இன்றைய காலத்தை நாம் நோக்கின்றபோது தம்பதினர் முதல் இரண்டு உறவு நிலைகளில் காணப்படுகின்றனர். மேற்கித்திய நாடுகளிலும் இவ்வாறே அமைகின்றது. இதனால்தான் குடும்ப உறவு நிலையற்றதாக அமைகின்றது. உள்ளார்ந்த உணர்வு அன்பு நிலை இல்லாiமாலும் இன்று உறவுகள் முறிந்து செல்லுகின்றன.

இன்று எம்மில் பலர் இன்றும் ஆழமான தூய்மையான உறவை பெற்றுக்கொள்ள முடியாது தவிப்பதைக் காண்கின்றோம். ஆகவே நாம் இந்த சூழ்நிலையில் இந்த புனிதர்கள்போல் இயேசுவில் ஆழமான உணர்வுபூர்வமான உறவை வைத்திருக்கும்போது நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என இவ்வாறு தெரிவித்தார்.