முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


