உயிர்நீத்த உறவுகளின் தாயக உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

இன அழிப்பு வாரம் – மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இறுதி
யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலிலே படுகொலைக்குள்ளான உறவுகளை
நினைவுகூரும் முகமாக உயிர்நீத்த உறவுகளின் தாயக உறவுகள் அமைப்பின்
ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால்
கஞ்சி வழங்கலும் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ஜெயந்திரகுமாரின் ஏற்பாட்டில்
நடைபெற்ற   இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர  முன்னாள் பிரதி தவிசாளரும்
தற்போதைய மாநகரச சபை உறுப்பினருமான எஸ்.சத்தியசீலன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார், மாநகர சபை
உறுப்பினர் சசிகலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக வழங்கப்படுகின்ற கஞ்சி
காய்ச்சப்பட்டதுடன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை
நினைவுகூர்ந்து பொதுச்சுடரை சாம்பசிவ சிவாச்சாரியார் ஏற்றிவைக்க  மலர்
அஞ்சலி மௌன அஞ்சலிகளும் செலுத்தப்பட்டன.

தொடர்ந்து  முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்குப் பகிரப்பட்டது.