காசா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரியான இஸ் அத்-தின் அல்-ஹடாட் (Izz al-Din al-Haddad) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையொன்றில், உயிரிழந்த நபர் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர் எனத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய சிவிலியன்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்களைக் கொலை செய்தமை, கடத்தல்களை மேற்கொண்டமை, மற்றும் காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்களுக்கும் இவரே பொறுப்புக் கூற வேண்டும் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
எவ்வாறாயினும், தமது குறித்த மூத்த அதிகாரியின் இந்த மரணம் குறித்து ஹமாஸ் அமைப்பு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.


