மகிழூரில் உள்ள பாலர் பாடசாலை மற்றும் நூலகம் என்பனவற்றின் கிழக்குப் புற சுற்றுமதிலானது 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான அடிக்கல்லினை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்கள் நாட்டு ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் ஒப்பந்த வேலைகளை செய்கின்ற சனசமூக நிலையத்தின் உடைய தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி உதவியாளர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு குறித்த அடுக்கள் வைக்கும் நிகழ்வை சிறப்பித்ததோடு தவிசாளர் அவர்களினால் விரைவாக இந்த சுற்றுமதில்லை அமைத்து மகளுக்கு கிராமத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி பாடசாலை விரைவாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கிராமத்தில் உள்ள மாணவர்களுடைய ஆங்கில மொழி புலமையினை விருத்தி செய்யும் வகையில் வெகுவிரைவில் ஆங்கில மொழி மூலமான பாலர் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்படும் என்றும் மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மகிழூர் பெரும் பிரதேசத்தில் தன்னால் மேற்கொள்ளப்படும் எனவும் கருத்துரைத்தமையும் குறிப்பிடத்தக்கது.








