களுவாஞ்சிக்குடியில் அமையப்பெற்றுள்ள அன்பின் ஊற்று உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக பிரதேசத்தில் உள்ள பெண்களை மையப்படுத்தி பல்வேறு சுயதொழில் வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது இந்த சுயதொழில் திட்டத்தில் தையல் தொடர்பான சுயதொழில் மேலும் உணவு பொருட்கள் தயாரித்தல் மற்றும் ஆரி வேக் போன்ற பல்வேறு தொழில் பயிற்சிகள் சுமார் 100 மாணவர்களை கொண்டு உதவும் கரங்கள் அன்பின் ஊற்று ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட தவிசாளர் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறுகின்ற பயனாளிகளுக்கு எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பினை வழங்குவது தொடர்பாகவும் உங்களுடைய பயிற்சியை பயனுள்ள வகையில் அவர்கள் எதிர்கால சுய தொழிலை மேற்கொள்வதற்கு தன்னால் ஆன அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் குறித்த நிகழ்வின் போது தெரிவித்திருந்த மையும் குறிப்பிடத்தக்கது.






