சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது.
இதேவேளை, மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் 0.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 96.29 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.
அத்துடன், ப்ரேன் ரக மசகு எண்ணெய் 0.21 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 108 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், இயற்கை எரிவாயுவின் விலையும் 1.25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 2.51 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.


