கோடீஸ்வரன் எம்பி தாண்டியடி விக்னேஸ்வராவுக்கு மேலைத்தேய இசைக்கருவிகள்!

( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட
திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு
(Western Key Band) மேலைத்தேய இசைக்கருவிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ்
இவ் இசைக் கருவிகள். கொள்வனவு செய்யப்பட்டது.

அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக இக் கருவிகள் கையளிக்கப்பட்டன.