சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தை தரிசித்த உலகளாவிய இகிமி சுவாமி சுஹிதானந்தா ஜீ

( வி.ரி. சகாதேவராஜா)

உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் தலைமையிலான குழுவினர் நுவரேலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தை நேற்று முன்தினம் தரிசித்தார்.

இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ வழிகாட்டலில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் ஏற்பாட்டில் இக் குழுவினர் விஜயத்தை மேற்கொண்டனர்.

பின்னர் கொட்டகலை இராமகிருஷ்ண மிஷன் சிவானந்த ஆச்சிரமத்திற்கு விஜயம் செய்தனர்.