அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த 21 வயதுடைய மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 23 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 21 வயதுடைய மற்றைய இளைஞர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிள் செலுத்துநரின் கவனயீனமே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரர் மேற்கொண்டு வருகின்றனர்.


