மீரிஹான பொலிஸ் பயங்கரவாத விசாரணை திணைக்களம் (TID) பத்மினி ஜெயவர்த்தன என்ற 70 வயது மதிக்கத்தக்க தாயார் ஒருவரை நேற்று (05) விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவில் வசிக்கும் அவரது மகனான டொன் லாஹிரு பிரதீபாவி ஜெசிங்க என்பவருக்கும், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தில் செயற்பாடுகளை இலங்கையில் மீள உருவாக்குவதற்கு முயற்சி செய்வதாக சந்தேகத்தின் கீழ், கிளிநொச்சியில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஒருவருக்கும் இவருக்குமிடையிலான தொடர்புகள் பற்றியும், லண்டனில் அவரது செயல்பாடுகள் பற்றியும், விசாரிப்பதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை மீட்பதற்காக சட்டத்தரணி டில்ஷான் வீரசேகர அவர்களுடன் பொலிஸ் நிலையம் சென்ற பத்மினி ஜெயவர்த்தனவின் உறவினரான அஞ்சலி சாணிக்கா என்பவரையும் போலீசார் விசாரித்துள்ளனர். அச் சட்டத்தரணியின் பகிரத முயற்சியால் அவர்கள் நீண்டநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

