மட்டக்களப்பின் புலமைத் துவ ஊற்றுக் கண்கள் , பேசப்படாத பக்கங்கள் தொடர் – 4

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க புலமைத்துவ குழு வாரம்தோறும் நடத்தும் மட்டக்களப்பின் புலமைத்
துவ ஊற்றுக் கண்கள் , பேசப்படாத பக்கங்கள் தொடர் – 4 நிகழ்வானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி முன்னிலையில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க துணைத்தலைவர் சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம்
தலைமையில் கடந்த 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை தலைவரின் காரியாலய அவைக்கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் “சின்னப்பு உடையார் கனகரெத்தினம்
(S. O. Canagaratnam)” (1880-1938) அவர்களைப்பற்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட வரலாற்றுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.கௌரி லக்சுமிகாந்தன் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

சின்னப்பு உடையார் மகன் கனகரெத்தினம் அவர்களின் குடும்ப பின்னணியில் காரைதீவில் பிறந்துள்ளார்.புனித அந்தோனியார் ஆங்கிலப்பாடசாலையில் கல்விபயின்றவர் .எழுது வினைஞராக இருந்து பின்பிரதி பிஸ்கால் Deputy Fiscal ஆக இருந்துள்ளார்.பிரதம முதலியாராகவும் பணிபுரிந்துள்ளார்.இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலா ற்று எழுத்தியலில் ஆவணப்படுத்திய முன்னோடிகளில் முதன்மையானவர்.1936ல் அரசாங்க சபை உறுப்பினராகவும்.தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1921ல் 150 பக்கங்களைக்கொண்ட ஆங்கில நூல் ஒன்று வரலாற்று பங்களிப்பாக எழுதியுள்ளார். இதில் மட்டக்களப்பின் வரலாற்றுப் பின்னணி,புவியியல்அமைப்பு,இயற்கைவளங்கள்,தாவர விலங்கினங்கள்,வாய்ந்த தொல்லியல் இடங்கள்,மக்களின்சமுகவாழ்க்கை,சாதியமைப்பு,மரபுகள்,சடங்குகள்,சம்பிரதாயங்கள்,சமய வழிபாடு திருவிழாக்கள் பொருளாதார, நிர்வாக,நிலமைகள், உள்ளடக்கமாக எழுத்தில் வரலாற்று முக்கியத்துவமாக காணப்படுகின்றது. அதாவது,வரலாற்றை,வாய்மொழிமரபு,சமூகவழக்காறு,புவியியல்தகவல்கள்,பழக்கவழக்கங்கள்,இவற்றிற்கு ஆவணப்படுத்திய ஒரு முன்னோடியாவார்.
F.X.C.நடராஜாஅவர்களின் மட்டக்களப்பு மான்மியம் நூலில் கனகரெத்தினம் அவர்களின் நூல் முக்கிய இடம் பெறுகின்றது.

ன் ஒவ்வொன்றாக விளக்கியுள்ளார். மட்டக்களப்பின் தொடக்க காலப் புவியியல் ஆவணம் (Topographical Baseline) பிரித்தானியர் கால மட்டக்களப்பு -நிலவியல் எல்லைகள் தெற்கே உள்ள குமுக்கன் ஆறு (Kumbukkan) தொடங்கி வடக்கே உள்ள வெருகல் ஆறு (Verugal) வரை கிழக்குக் கடற்கரையோரமாக 130 மைல் நீளத்திற்குப் பரந்துள்ள பரப்பு இலங்கையின் வெனிஸ்” (The Venice of Ceylon) உள்ளூர் மக்கள் (புளியண்டுவா) வரலாறு,தொல்லியல் அம்சங்கள் பற்றி நோக்கின் தொல்லியல் சிறப்புமிக்க இடங்கள், பழைய வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள் 2 சமகால வரலாறு- புள்ளிவிபரத் தரவுகள் மட்டக்களப்பின் புராதன வரலாறு பற்றிக் கூறுமிடத்து ஐதிகங்கள் முன்வைக்கப்படுகின்றன. – இராமாயணக்கதை முன்னைய வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.மகாவம்சத்தை மையப்படுத்திய வரலாறு கூறப்படல். வன்னியர் ஆட்சி (கண்டிக் கால காலத்துடன் ஒத்துப் பேசப்படுகின்றது) விடயங்கள் துட்டகாமிணி பிராமிக் கல்வெட்டுக்கள் அடையாளங்கள் காணப்படுகின்றது. அந்த வகையில் கல்வி சுகாதாரம் நீர் பாசனம் தொழில் துறை தாவரவியல் சமூகப் பண்பாட்டு அம்சங்கள் சடங்குகள் போன்றவற்றை இவரது நூலின் ஊடாக அறிய கூடியதாக உள்ளது. இவ்வாறு தனது நூல் மூலமாக மட்டக்களப்பிற்குரிய தனித்துவமான விடயங்களை எடுத்துக் கூறியுள்ளார். என அவர்தொடர்பான பல்வேறு விடயங்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.கௌரி லக்சுமிகாந்தன் அவர்களால்
அவர்களால் தெட்டத் தெளிவாக குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுத்துக்காட்டி இருந்தார். தொடர்ந்து சபையோரின் பல்வேறு வினாக்களுக்கும் திருமதி.கௌரி லக்சுமிகாந்தன் அவர்களால் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.