தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்ற களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம்

( வி.ரி.சகாதேவராஜா)

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் 2025/2026 போட்டியில் தேசிய ரீதியாக தங்க விருது, 1ம், 2ம், மற்றும் 3ம் இடங்களை பெற்றுக்கொண்ட அரச திணைக்களங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பங்கு பற்றுதலுடன் நேற்று (08.11.2026) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமானது தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டமைக்கான விருதினை பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மிக்க மகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்.