( வி.ரி.சகாதேவராஜா)
சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் நாளை 10.11.2026 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறவுள்ளது.
கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு முருகப் பெருமானை வழிபட்டு, அவரது திருவருளைப் பெற விரும்பும் முருக பக்தர்கள் அனைவரும் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறு ஆலய ஆதீனகர்த்தா தியாகராஜா( வேல்சாமி) கேட்டுக்கொண்டுள்ளார்.
.


