காத்தான் குடி முதியோர் இல்லத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த இரத்த தான முகாம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான் குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தினால் ல் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இரத்த தான முகாம், 2026 சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, 2026 அக்டோபர் 4, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த உன்னதமான நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள் ராஜ் விசேட அதிதியாகக் கலந்துகொண்டதுடன், நேரில் இரத்த தானம் செய்தார். அவரது தொடர்ச்சியான ஈடுபாடும் ஆதரவும் இந்நிகழ்ச்சிக்கு ஒரு விசேட முக்கியத்துவத்தை வழங்கியது.

வருடாந்த இரத்த தான முகாம், காத்தான் குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் ஒரு முக்கிய முன்னெடுப்பாகக் காணப்படுகிறது. இல்லத்தில் வசிக்கும் முதியோர்களின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதோடு, உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் பங்களிப்பதற்கு சகல சமூகத்தவர்களை ஒன்றிணைத்தது.

இவ்விரத்த தான முகாமில் 51 இரத்தக் கொடையாளர்கள், தன்னார்வலர்கள் போன்றவர்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்ததுடன், தாராள மனப்பான்மை, கருணை மற்றும் கூட்டு அர்ப்பணிப்பைப் பிரதிபலித்ததுடன் , இத்தகைய முன்னெடுப்புகள், இல்லத்திற்கும் பரந்த சமூகத்திற்கும் இடையிலான உறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதோடு, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் பிறர் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மைக்கும் வழிகாட்டியது.